கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் EpiSci என்ற நிறுவனம் ஹைபர்சோனிக் ஏவுகணைகளை கண்டறியும் புதிய மென்பொருள் கருவியை உருவாக்கி வருகிறது. செயற்கைக்கோள் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த மென்பொருள் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பயணிக்கின்றன. இவற்றை கணிப்பது மிகவும் சவாலானது. இந்த நிலையில், பூமியிலிருந்து குறுகிய உயரத்தில் செயற்கைக்கோள் கட்டமைப்புகளை உருவாக்கி, அந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஏவுகணைகளை கணிக்க ஸ்பேஸ் டெவெலப்மென்ட் ஏஜென்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, EpiSci நிறுவனத்தை தேர்ந்தெடுத்துள்ளது. EpiSci சார்பில் ஆய்வு பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.