விண்வெளியில் உள்ள விண்கலத்துடன் உரையாட, சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு சாட் பாட் கருவியை உருவாக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. நாசா பொறியாளர்கள் இந்த பணியில் முனைப்புடன் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
வரும் நவம்பர் 2024 ஆம் ஆண்டு, நிலவில் விண்வெளி நிலையத்தை அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது. இந்த நிலையத்திலிருந்து வெகுதூர நிலவுகள் மற்றும் கோள்களுக்கு அனுப்பப்பட்ட விண்கலங்களுடன் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் உதவியுடன் தொடர்பை ஏற்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது. இவை, சாட் ஜிபிடி அடிப்படையில் உருவாக்கப்படும் அதிநவீன ரோபோக்களாக இருக்கும் என தெரிவித்துள்ளது.