ஜியோ நிறுவனம், ஷார்ட் வீடியோ செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போலவே இதிலும் வீடியோக்களை உருவாக்கி பகிர முடியும். இதுகுறித்த விரிவான தகவல்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால், செயலி அறிமுகமாவது உறுதியாகியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த புதிய செயலி, தற்போது பீட்டா பரிசோதனை கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. வரும் 2023 ம் ஆண்டில், இது பொதுவெளியில் அறிமுகம் ஆகும் என கருதப்படுகிறது. மேலும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போலவே இதன் அடிப்படை செயல்பாடுகள் இருக்கும் என்று கருதப்படுகிறது. எனவே, இந்த புதிய செயலியில், வருமானம் ஈட்டும் வாய்ப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த அறிவிப்பு மக்களிடையே ஆவலை அதிகரித்துள்ளது.