திருச்சியிலிருந்து சவூதி அரேபியாவின் தமாம் நகருக்கான புதிய விமான சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் இந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விமான சேவை, வாரம் இரு நாட்களில், வியாழக்கிழமை மற்றும் ஞாயிறு இயக்கப்படுகிறது. அட்டவணையின்படி, திருச்சியில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்பட்டு, தமாமுக்கு 9.10 மணிக்கு அடையும் விமானம், மறு திசையில், தமாமிலிருந்து 10.10 மணிக்கு புறப்பட்டு, திருச்சிக்கு 5.40 மணிக்கு திரும்பும். முதல் பயணத்தில் 123 பேர் பயணம் செய்தனர். மேலும் 130 பேர் ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். இது, திருச்சியிலிருந்து 10வது சர்வதேச நகரமாக தமாம் சேர்க்கப்படுவதற்கான முன்னேற்றமாகும்.