வரும் 2025 ஆம் ஆண்டு, டாடா குழுமத்தின் நிதி நிறுவனமான டாடா கேப்பிட்டல் லிமிடெட் ஐபிஓ வுக்கு வருவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.பொதுப்பங்கிட்டுக்கு வெளியிடப்படும் நடவடிக்கையின் பகுதியாக, டாடா கேப்பிட்டல் நிறுவனம், வேறு சில பிரிவுகளையும் உள்ளடக்கி விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில், ரிலையன்ஸ் குழுமம், தனது அனைத்து நிதித் துறை சார்ந்த வர்த்தகங்களையும் ஜியோ பைனான்சியல் என்ற பெயரில் பிரித்தது. அதேபோன்ற நடவடிக்கையில் டாடா குழுமமும் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. டாடா கேப்பிட்டல் பொது பங்கீட்டில் இது முழுமை பெறும் என கூறப்படுகிறது. மத்திய ரிசர்வ் வங்கியின் ஒழுங்கு முறைகளின் படி, இதற்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன எனவும், 2025 ஆம் ஆண்டுக்குள் அனைத்து நடவடிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு, பொது பங்கீடு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.