ஏர் இந்தியாவின் விருப்ப ஓய்வு திட்டம் அறிவிப்பு

March 18, 2023

ஏர் இந்தியா நிறுவனம், நேற்று விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் கையகப்படுத்திய பின்னர், இரண்டாவது முறையாக விருப்ப ஓய்வு அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த முறை, கிட்டத்தட்ட 2100 பணியாளர்கள் விருப்ப ஓய்வுக்கு தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏர் இந்தியா நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருபவர்கள் மற்றும் 55 வயதை கடந்தவர்களுக்கு இந்த விருப்ப ஓய்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா அறிவித்துள்ள விருப்ப ஓய்வில், […]

ஏர் இந்தியா நிறுவனம், நேற்று விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் கையகப்படுத்திய பின்னர், இரண்டாவது முறையாக விருப்ப ஓய்வு அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த முறை, கிட்டத்தட்ட 2100 பணியாளர்கள் விருப்ப ஓய்வுக்கு தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏர் இந்தியா நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருபவர்கள் மற்றும் 55 வயதை கடந்தவர்களுக்கு இந்த விருப்ப ஓய்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா அறிவித்துள்ள விருப்ப ஓய்வில், இந்த முறை, கிளார்க்குகள், தொழிலாளர்கள் ஆகியோருடன் பொதுத்துறை அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர். மேலும், பிற துறை சார்ந்த ஊழியர்களும் விருப்ப ஓய்வு பெறலாம் என்று நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கேம்ப்பெல் வில்சன் தெரிவித்துள்ளார். அத்துடன், விருப்ப ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு, அவர்களின் தீர்வு தொகை போக, ஒரு லட்ச ரூபாய் இன்செண்டிவாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம், நிறுவனத்திற்கு கணிசமான தொகை மிச்சப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. விருப்ப ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ள அதே வேளையில், பணி அமர்வுகளையும் ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. நடுத்தர வயதுடைய, திறன் வாய்ந்த பணியாளர்களை கேபினில் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu