சென்னையில் புதிய விமான முனையத்தில் 25ம் தேதியில் இருந்து விமான சேவை தொடக்கம்

April 19, 2023

சென்னை சர்வதேச விமானநிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த விமான முனையத்தில் வரும் 25ம் தேதியில் இருந்து விமான சேவைகள் தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 8ம் தேதி இப்புதிய முனையம் திறந்து வைக்கப்பட்டது. புதிய முனையத்தில் வெளிநாட்டு விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு மேற்கொள்ளப்படும். விமான சேவைகள் புதிய முனையத்திற்கு மாற்றப்பட்ட பின்னர், தற்போதுள்ள 4-வது முனையம் உள்நாட்டு முனையமாக மாற்றப்படும். 3-வது முனையம் இடிக்கப்பட்டு, புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தின் 2-வது பகுதிப் பணிகள் மேற்கொள்ளப்படும். […]

சென்னை சர்வதேச விமானநிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த விமான முனையத்தில் வரும் 25ம் தேதியில் இருந்து விமான சேவைகள் தொடங்குகிறது.

பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 8ம் தேதி இப்புதிய முனையம் திறந்து வைக்கப்பட்டது. புதிய முனையத்தில் வெளிநாட்டு விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு மேற்கொள்ளப்படும். விமான சேவைகள் புதிய முனையத்திற்கு மாற்றப்பட்ட பின்னர், தற்போதுள்ள 4-வது முனையம் உள்நாட்டு முனையமாக மாற்றப்படும். 3-வது முனையம் இடிக்கப்பட்டு, புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தின் 2-வது பகுதிப் பணிகள் மேற்கொள்ளப்படும். புதிய முனைய கட்டிடம் செயல்படத் தொடங்கிய பின்னர், சென்னை விமான நிலையம் தனித்துவமான பொறியியல், அற்புதங்களுடன் பயணிகளுக்கு வசதியான விமான நிலையமாக மாறும். வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு முதல் விமான சேவை நடக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu