ஜனாதிபதி திரவுபதி முர்மு 27-ந்தேதி தமிழ்நாட்டுக்கு வருகை புரிய உள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு 27-ந்தேதி தமிழ்நாட்டுக்குப் பயணிக்கிறார். அவர் தனது பயணத்தை கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து தொடங்கி, ஊட்டி, குன்னூர், திருவாரூர் என பல இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் தங்கி, அங்கு பயிற்சி பெறும் ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்துவார். பின்னர், 29-ந்தேதி நீலகிரி பழங்குடி மக்களை சந்தித்து, 30-ந்தேதி திருவாரூரில் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். அதற்கான அனைத்து பாதுகாப்பு மற்றும் வசதி ஏற்பாடுகளும் மாவட்ட அதிகாரிகளின் கவனத்தில் உள்ளன.