இத்தாலியில் ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து விமான நிலைய ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்.
இத்தாலியில் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட விமான நிலைய ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரியும், ஒப்பந்தத்தை நீட்டிக்க வலியுறுத்தியும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரோம் , வெனிஸ், மிலன் விமான நிலையங்களில் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா மக்கள் விமானத்தில் பயணம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
கோடை விடுமுறை காலத்தில் ரோம், மிலன், வெனிஸ் போன்ற சுற்றுலா நகரங்களில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அங்கு தொழில் செய்யும் மக்கள் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளனர். இதில் ரோம் நகரில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட விமானங்களும், மிலன் நகரில் 150-க்கும் மேற்பட்ட விமானங்களும், ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் போக்குவரத்து துறை மந்திரி கூறும் பொழுது, விமான நிலை பணியாளர்கள் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளையும், மக்களையும் சிரமப்படுத்தாமல் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றார்.














