சீனா - ஆப்பிள் பின் வாங்கியதை அடுத்து, ஜெட் ஃபேக்டரியை விரிவாக்கம் செய்யும் ஏர்பஸ்

April 7, 2023

ஐபோன் உற்பத்தியை சீனாவில் குறைத்து, பிற பகுதிகளில் விரிவாக்கும் நடவடிக்கையில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதனால், சீனாவின் உற்பத்தி துறை சரிவடையும் நிலையில் இருந்தது. இந்நிலையில், ஐரோப்பாவை சேர்ந்த விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ், சீனாவில் தனது உற்பத்தியை இரு மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளது. எனவே, சீனாவில் உள்ள தனது ஃபேக்டரி செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சீனாவில் உள்ள தியான்ஜின் பகுதியில், ஏர்பஸ் நிறுவனத்தின் ஃபேக்டரி இயங்கி வருகிறது. தற்போது, இதன் வளாகத்திலேயே மற்றொரு […]

ஐபோன் உற்பத்தியை சீனாவில் குறைத்து, பிற பகுதிகளில் விரிவாக்கும் நடவடிக்கையில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதனால், சீனாவின் உற்பத்தி துறை சரிவடையும் நிலையில் இருந்தது. இந்நிலையில், ஐரோப்பாவை சேர்ந்த விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ், சீனாவில் தனது உற்பத்தியை இரு மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளது. எனவே, சீனாவில் உள்ள தனது ஃபேக்டரி செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

சீனாவில் உள்ள தியான்ஜின் பகுதியில், ஏர்பஸ் நிறுவனத்தின் ஃபேக்டரி இயங்கி வருகிறது. தற்போது, இதன் வளாகத்திலேயே மற்றொரு புதிய கட்டமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. இங்கு ஏ 320 ரக விமானங்கள் வடிவமைக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏர்பஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு, சீன உற்பத்தி துறைக்கு முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. பல அமெரிக்க நிறுவனங்கள், சீனாவில் உற்பத்தியை மேற்கொள்ள தயங்கி வரும் நிலையில், ஏர்பஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu