அகமதாபாத், காந்திநகர் மற்றும் இம்பால் ஆகிய இந்திய நகரங்களில் பார்தி ஏர்டெல் நிறுவனம், 5ஜி இணைய சேவையை அறிமுகம் செய்வதாக தெரிவித்துள்ளது. மேலும், விசாகப்பட்டினத்திலும் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியாவில், 5ஜி இணைய சேவையை வேகமாக வழங்குவதில், ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. அத்துடன், வர்த்தகப் பயன்பாட்டிற்கான 5ஜி சேவையை வழங்கும் ஒரே தொலைத்தொடர்பு நிறுவனமாக ஏர்டெல் உள்ளது. தற்போது, ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களில், அகமதாபாத், காந்திநகர், இம்பால், விசாகப்பட்டினம் நகரங்களில் வசிக்கும் மக்கள் 5ஜி சேவையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.














