ஆகாசா ஏர்' விமானத்தில் செல்லப் பிராணிகளுக்கு அனுமதி

October 7, 2022

'ஆகாசா ஏர்' விமானங்களில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை நவம்பர் முதல் எடுத்துச் செல்லலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 'ஆகாசா ஏர்' என்ற விமான சேவை நிறுவனம் சமீபத்தில் துவங்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வினய் துபே கூறுகையில், பயணியரின் வேண்டுகோளை ஏற்று, நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை விமானங்களில் எடுத்துச் செல்லும் சேவையை நவம்பர் முதல் துவங்க உள்ளோம். இதற்கான முன்பதிவு அக்டோபர் 15 முதல் துவங்குகிறது. அனைத்து செல்லப்பிராணிகளும் […]

'ஆகாசா ஏர்' விமானங்களில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை நவம்பர் முதல் எடுத்துச் செல்லலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

'ஆகாசா ஏர்' என்ற விமான சேவை நிறுவனம் சமீபத்தில் துவங்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வினய் துபே கூறுகையில், பயணியரின் வேண்டுகோளை ஏற்று, நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை விமானங்களில் எடுத்துச் செல்லும் சேவையை நவம்பர் முதல் துவங்க உள்ளோம். இதற்கான முன்பதிவு அக்டோபர் 15 முதல் துவங்குகிறது.

அனைத்து செல்லப்பிராணிகளும் கூண்டில் அடைக்கப்பட்டு இருக்க வேண்டும். அதிகபட்சமாக 7 கிலோ வரை எடையுள்ள செல்லப் பிராணிகளை தங்களுடனேயே பயணியர் எடுத்துச் செல்லலாம். விமானத்தின் 'கார்கோ' பிரிவில் எடுத்து வரப்படும் செல்லப் பிராணிகள் அதிகபட்சமாக 32 கிலோ வரை இருக்கலாம் என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu