சீனாவை சேர்ந்த பிரபல இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனத்தின் காலாண்டு வருவாய் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில், கிட்டத்தட்ட 25 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெறுவதாக அலிபாபா அறிவித்தது. ஆனால், முதலீட்டாளர்கள் மத்தியில் இதற்கு ஆதரவு கிடைக்கவில்லை.
கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், அலிபாபா நிறுவனத்தின் வருவாய் 260.35 பில்லியன் சீன யுவான் அளவில் பதிவாகியுள்ளது. அதன்படி, முந்தைய காலாண்டுகளுடன் ஒப்பிடுகையில் வருவாயில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன் எதிரொலியாக, பங்குச்சந்தையில் அலிபாபா பங்குகள் தொடர் சரிவை பதிவு செய்து வருகின்றன. முதலீட்டாளர்கள் மத்தியிலும் அலிபாபா நிறுவனம் செல்வாக்கை இழந்து வருவதாக கூறப்படுகிறது.