முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அடையாறு ஆற்றினை சீரமைப்பதற்காக ரூபாய் 4778 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
தமிழ்நாடு அரசு ஆறுகள் மற்றும் நீர் நிலைகளில் சுற்றுச்சூழலை சீரமைக்க தேவையான திட்டங்களை தயாரித்தல், ஒருங்கிணைத்தல், சீரமைப்பு பணிகளை கண்காணித்தல் மற்றும் சென்னை பெருநகரத்திற்கு உட்பட்ட கூவம் அடையாறு, கொசஸ்தலை ஆறு பக்கிங் ஹாம் கால்வாயுடன் இன்னும் பிற கால்வாய்கள் ஆகியவற்றை சீரமைக்கும் பணிகளை சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் மூலம் இலக்குகளை அடைய பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பெருநகரிலுள்ள ஆறுகளின் சுற்றுச்சூழலை மேம்படுத்த தமிழ்நாடு அரசினால் ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச்சூழல் சீரமைப்பு திட்டம் மற்றும் அடையாறு நதி சீரமைப்பு திட்டம் ஆகிய திட்டங்கள் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டையில் மூலம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது அரசு மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் அடையாறு ஆற்றை சீரமைக்கும் திட்டத்திற்காக ரூபாய் 4778.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர். மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.














