அதிமுகவின் கொடி மற்றும் சின்னங்களை பயன்படுத்துவதற்கு ஓபிஎஸ்- க்கு நிரந்தர தடை

March 19, 2024

அதிமுகவின் கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு ஓ. பன்னீர் செல்வத்திற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொது குழுவில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேரை கட்சியிலிருந்து நீக்கியும் பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தும் கடந்த 2022 ஜூலை 11ஆம் தேதி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை […]

அதிமுகவின் கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு ஓ. பன்னீர் செல்வத்திற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொது குழுவில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேரை கட்சியிலிருந்து நீக்கியும் பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தும் கடந்த 2022 ஜூலை 11ஆம் தேதி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நிரந்தரம் செய்து உத்தரவிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu