லித்தியம் அயன் பேட்டரி தொடர்பான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக அமரராஜா எனர்ஜி நிறுவனம் செய்தி அறிக்கை வெளியிட்டது. இதன் விளைவாக, இன்றைய வர்த்தகத்தில் அமரராஜா நிறுவனத்தின் பங்குகள் 20% அளவுக்கு உயர்ந்தன. மேலும், வரலாற்று உச்சமாக, அமரராஜா நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 1655.2 ரூபாய் அளவில் வர்த்தகமானது.
லித்தியம் அயன் பேட்டரி தயாரிப்புக்கான தொழில்நுட்ப கூட்டணி GIB EnergyX Slovakia என்ற நிறுவனத்துடன் அமைந்துள்ளதாக அமரராஜா தெரிவித்துள்ளது. அதன்படி, GIB EnergyX Slovakia நிறுவனத்தின் தொழில்நுட்பங்களை கற்று, அமரராஜா நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த பேட்டரிகளை தயாரிக்க உள்ளது.