அமேசான் ஆறுகளில் வரலாறு காணாத வறட்சி

October 18, 2023

அமேசான் நதியின் இரண்டாவது பெரிய துணை நதியான நெகரோ ஆற்றின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவுக்கு தாழ்நிலையை எட்டியுள்ளது. உலகின் பெரிய காடான அமேசான் காடுகளின் ஒரு பகுதியான இங்கு மோசமான வறட்சி நிலவி வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதியில் பெரிய வெள்ளம் ஏற்பட்டது. இன்னொரு துணை நதியான மெதய்ராவிலும் நீர்மட்டம் குறைந்து விட்டது. இதனால் பிரேசிலின் சாந்தோ அந்தோனியோ அணை நீர் மின் உற்பத்தி நிலையம் உற்பத்தியை நிறுத்திவிட்டது. பிரேசில் பகுதியில் உள்ள […]

அமேசான் நதியின் இரண்டாவது பெரிய துணை நதியான நெகரோ ஆற்றின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவுக்கு தாழ்நிலையை எட்டியுள்ளது. உலகின் பெரிய காடான அமேசான் காடுகளின் ஒரு பகுதியான இங்கு மோசமான வறட்சி நிலவி வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதியில் பெரிய வெள்ளம் ஏற்பட்டது. இன்னொரு துணை நதியான மெதய்ராவிலும் நீர்மட்டம் குறைந்து விட்டது. இதனால் பிரேசிலின் சாந்தோ அந்தோனியோ அணை நீர் மின் உற்பத்தி நிலையம் உற்பத்தியை நிறுத்திவிட்டது. பிரேசில் பகுதியில் உள்ள அமேசான் ஆறுகளின் நீர்மட்டம் குறைந்ததால் அதனை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த மக்கள் குடிதண்ணீருக்கு கூட தவித்து வருகின்றனர். இந்த ஆறுகள் வறண்டதால் மானவ்ஸ் நகருக்கான வர்த்தக ரீதியிலான படகு போக்குவரத்து தொழில் பாதித்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான டால்பின்களும் கடந்த வாரங்களில் இறந்துள்ளது. வரும் நாட்களில் இதை விட மோசமான சூழல் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.பருவநிலை மாற்றம் காரணமாக இந்த மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது என்று பிரேசிலிய தேசிய நிறுவனத்தின் அமெரிக்கா ஆய்வாளர் பிலிப் கூறினார்.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 806

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu