யுபிஐ பரிவர்த்தனை செயலிகள் மூலம், ஒரே நாளில் பணம் அனுப்புவதற்கு, உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு யுபிஐ தளத்திற்கும் வேறுபடுகிறது.
அமேசான் பே மற்றும் கூகுள் பே தளங்களில், ஒரு நாளைக்கு 10,00,000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்ய முடியும். அமேசான் பேயில் ஒரு நாளைக்கு 20 பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். ஆனால் கூகுள் பேயில் 10 பரிவர்த்தனைகள் மட்டுமே மேற்கொள்ள முடியும்.
பேடிஎம் செயலியில் 1,00,000 ரூபாய் வரை யுபிஐ பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். ஆனால், ஒரு மணி நேரத்திற்கு 20000 ரூபாய் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும். அத்துடன், ஒரு மணி நேரத்திற்கு 5 பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய முடியும். மொத்தமாக ஒரு நாளைக்கு 20 பரிவர்த்தனைகள் செய்து கொள்ளலாம்.
போன் பே செயலியில் 1,00,000 ரூபாயாக யுபிஐ பரிவர்த்தனை உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு தனிநபர் தனது வங்கியின் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப, ஒரு நாளைக்கு 10 அல்லது 20 பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.