வோடபோன் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, 2024 ஆம் நிதி ஆண்டில், ஒட்டுமொத்தமாக, 2.2% வளர்ச்சியை வோடபோன் நிறுவனம் பதிவு செய்துள்ளது. இது, வோடபோன் மீதான சந்தை கணிப்புகளை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
கடந்த காலாண்டில் பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் வோடபோன் நிறுவனம் அதிக முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. மேலும், உலக அளவில் ஜெர்மனி வோடபோன் முக்கிய சந்தையாக விளங்குகிறது. கடந்த ஒரு வருடத்தில், கடும் நிதி நெருக்கடியை வோடபோன் எதிர் கொண்டுள்ளது கடந்த ஓராண்டில் வோடபோன் பங்குகள் 22% வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் இருந்து வெளியேற வோடபோன் பரிசீலித்து வருகிறது. அதே வேளையில் ஆப்பிரிக்க சந்தையில் வோடபோனுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.