அமேசான் 14000 மேலாளர் பணிகளை குறைக்கும் திட்டம்

March 19, 2025

அமேசான் நிறுவனம் இந்த ஆண்டு 14000 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது ஆண்டுதோறும் 2.1 பில்லியன் முதல் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேமிக்கும் நோக்கில், இந்தாண்டு 14,000 மேலாளர் பதவிகளை நீக்க அமேசான் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இது அமேசானின் உலகளாவிய மேலாளர் பணியாளர்களில் 13% ஆகும். இதன் மூலம், நிர்வாக பணியாளர்கள் எண்ணிக்கை 1,05,770 இலிருந்து 91,936 ஆகக் குறைகிறது. இந்த வேலை குறைப்பு அமேசான் வலை சேவைகள் (AWS), சில்லறை விற்பனை செயல்பாடுகள் […]

அமேசான் நிறுவனம் இந்த ஆண்டு 14000 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது

ஆண்டுதோறும் 2.1 பில்லியன் முதல் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேமிக்கும் நோக்கில், இந்தாண்டு 14,000 மேலாளர் பதவிகளை நீக்க அமேசான் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இது அமேசானின் உலகளாவிய மேலாளர் பணியாளர்களில் 13% ஆகும். இதன் மூலம், நிர்வாக பணியாளர்கள் எண்ணிக்கை 1,05,770 இலிருந்து 91,936 ஆகக் குறைகிறது.

இந்த வேலை குறைப்பு அமேசான் வலை சேவைகள் (AWS), சில்லறை விற்பனை செயல்பாடுகள் மற்றும் மனிதவளப் பிரிவுகளை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. கொரோனா தொற்றுநோய் காலத்தில் அமேசான் பெருமளவில் பணியாளர்களை நியமித்தது. 2019 ஆம் ஆண்டில் 7,98,000 பேர் வேலை பார்த்த நிலையில், 2021 இறுதியில் இந்த எண்ணிக்கை 16 லட்சமாக உயர்ந்தது. அதன் பின்னர், அமேசான் தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu