அமேசான் நிறுவனம் தொடர்ந்து பல மாதங்களாக இழப்புகளை சந்தித்து வருகிறது. எனவே, அதனை ஈடுகட்ட, சுமார் 10,000 ஊழியர்கள் வரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமேசான் நிறுவனத்தின் வரலாற்றில் இத்தகைய பெரிய அளவில் பணி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 1% பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர்.
நிறுவனத்தின் குறிப்பிட்ட சில துறைகளில், லாபங்கள் ஈட்டப்படவில்லை. எனவே, அந்த துறைகளில் உள்ள பணியாளர்கள், அமேசான் நிறுவனத்துக்குள்ளேயே வேறு துறைகளில் பணிகளைத் தேடிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், பணி நீக்க நடவடிக்கையும் குறிப்பிட்ட அந்த துறைகளில் நிகழும் என்று கருதப்படுகிறது. குறிப்பாக, அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் துறையில் பணி நீக்கம் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்விட்டர், மெட்டா ஆகியவற்றை தொடர்ந்து அமேசானும் பணி நீக்க நடவடிக்கையில் களமிறங்கி உள்ளது பேசுபொருள் ஆகியுள்ளது.














