அமேசானின் இன்டர்நெட் சாட்டிலைட் திட்டம் - 2024 ல் தொடக்கம்

அமேசான் நிறுவனம், வரும் 2024 ஆம் ஆண்டில், தனது முதல் இன்டர்நெட் சாட்டிலைட்டை நிறுவ உள்ளது. இதன் மூலம், ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு போட்டியாக, சர்வதேச பிராட்பேண்ட் இணைய சேவைகளை அமேசான் வழங்க உள்ளது. ‘குயிப்பர்’ என்று இந்த செயற்கைக்கோள் அமைப்புக்கு பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான செயற்கைக்கோள்களை உருவாக்கும் பணி இந்த வருடம் தொடங்கப்படும் என்று அமேசான் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக, பூமியிலிருந்து குறைந்த உயரத்தில், 3000 செயற்கை கோள்களை நிறுவ அமேசான் திட்டமிட்டுள்ளது. இதற்கான பீட்டா […]

அமேசான் நிறுவனம், வரும் 2024 ஆம் ஆண்டில், தனது முதல் இன்டர்நெட் சாட்டிலைட்டை நிறுவ உள்ளது. இதன் மூலம், ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு போட்டியாக, சர்வதேச பிராட்பேண்ட் இணைய சேவைகளை அமேசான் வழங்க உள்ளது.

‘குயிப்பர்’ என்று இந்த செயற்கைக்கோள் அமைப்புக்கு பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான செயற்கைக்கோள்களை உருவாக்கும் பணி இந்த வருடம் தொடங்கப்படும் என்று அமேசான் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக, பூமியிலிருந்து குறைந்த உயரத்தில், 3000 செயற்கை கோள்களை நிறுவ அமேசான் திட்டமிட்டுள்ளது. இதற்கான பீட்டா டெஸ்டிங் வரும் 2024 ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், 2026 ஆம் ஆண்டுக்குள், 3236 செயற்கைக்கோள்களை நிறுவ இலக்கு நிர்ணயித்துள்ளது. எனவே, நாளொன்றுக்கு 3 முதல் 5 செயற்கைக்கோள்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான முதலீடாக, 10 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டத்திற்கான 3 முக்கிய ஆண்ட்டனாக்கள் நேற்று வெளியிடப்பட்டன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu