சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் ரூபாய் 150.05 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
அம்பத்தூர் தொழில் பேட்டையில் 5000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இதில் ஆவடி,பட்டாபிராம், உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அங்குள்ள பஸ் நிலையத்தில் இருந்து கோயம்பேடு, பூந்தமல்லி, சென்ட்ரல் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து பணிமனையும் உள்ளது. ஆனால் அம்பத்தூர் பஸ் நிலையம் எந்தவித நவீன வசதியும் இல்லாமல் இருக்கின்றது. தனித்த கழிப்பறை இல்லாமல், பஸ் நிலையத்தில் மேல் பகுதியில் சிமெண்ட் ஓடுகள் உடைந்தும் காணப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 150.05 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். அதில் அம்பத்தூர் பஸ் நிலையம் சீரமைக்க ரூபாய் 13.85 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கு பொதுமக்களும் பயணிகளும் வரவேற்பு அளித்துள்ளனர். இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.