கடந்த நவம்பர் 11 அன்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், இன்னும் ஹைதியின் முக்கிய சாலைகள் கும்பல் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், பொதுமக்கள் இயல்பாக நடமாட்டம் செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, ஹைதிக்கு செல்லும் அனைத்து விமான சேவைகளையும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போலவே, ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனமும் ஹைதிக்கு […]

கடந்த நவம்பர் 11 அன்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், இன்னும் ஹைதியின் முக்கிய சாலைகள் கும்பல் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், பொதுமக்கள் இயல்பாக நடமாட்டம் செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, ஹைதிக்கு செல்லும் அனைத்து விமான சேவைகளையும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போலவே, ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனமும் ஹைதிக்கு செல்லும் விமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக, அமெரிக்காவின் FAA (Federal Aviation Administration) அனைத்து அமெரிக்க விமான நிறுவனங்களும் ஹைதிக்கு விமானம் இயக்குவதை 30 நாட்களுக்கு தடை செய்துள்ளது. இதனால், ஹைதிக்கு செல்லும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, மனிதாபிமான உதவிகளை ஹைதிக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu