அமெரிக்காவின் பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 7.7% ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்க பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 8.3% ஆகவும், செப்டம்பர் மாதத்தில் 8.2 சதவீதமாகவும் பதிவானது. எனவே, அமெரிக்காவில் தொடர்ந்து பணவீக்கம் குறைந்து வருகிறது. மேலும், ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை, அக்டோபர் மாதத்தில் தான் குறைந்த அளவிலான உயர்வு பதிவாகியுள்ளது.
அமெரிக்க பெடரல் அமைப்பின் செயல்பாடுகளால், நுகர்வோர் குறியீட்டு எண், கடந்த செப்டம்பர் மாதத்தில் 0.6% அதிகரித்தது. அது அக்டோபர் மாதத்தில் 0.3% மட்டுமே அதிகரித்துள்ளது. மேலும், நகர்ப்புறத்தில் பணவீக்க விகிதம் 0.4% அதிகரித்துள்ளது. இதேபோன்ற நிலை தொடரும் பட்சத்தில், மாதாந்திர பணவீக்கம் 0.6 சதவீதத்திலிருந்து 0.5 சதவீதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டிசம்பர் மாதத்திற்குள், 50 அடிப்படை புள்ளிகள் வரை பணவீக்க விகிதத்தில் உயர்வு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.