அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் 2 நாள் பயணமாக இந்தியா வருகை

June 5, 2023

அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டன் இந்தியா வருகை தந்துள்ளார். 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அவருக்கு, வரவேற்பு அளிக்கப்பட்டு, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரது வருகை மூலம், இரு நாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பில் மேலும் வலிமை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ராணுவ வன்பொருள் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவற்றில் இருநாட்டு உறவுகள் வலுவடையும் எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், 3 […]

அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டன் இந்தியா வருகை தந்துள்ளார். 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அவருக்கு, வரவேற்பு அளிக்கப்பட்டு, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரது வருகை மூலம், இரு நாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பில் மேலும் வலிமை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ராணுவ வன்பொருள் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவற்றில் இருநாட்டு உறவுகள் வலுவடையும் எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், 3 பில்லியன் டாலர் மதிப்பிலான 30 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை இந்தியா அமெரிக்காவிடம் இருந்து வாங்குவது குறித்து கலந்துரையாடப்படும் என்று கருதப்படுகிறது.

தனது இந்திய பயணம் குறித்து லாய்டு ஆஸ்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘சுதந்திரமான இந்தோ பசிபிக் பிராந்தியம்’ என்ற லட்சியத்தை நோக்கி இரு நாடுகளும் முன்னெடுப்புகளை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இம்மாத இறுதியில், பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், தற்போது, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரின் இந்திய பயணம் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu