காஸா பகுதியைக் கைப்பற்றும் எண்ணமில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.காசாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் தரைப்படை தயார் நிலையில் இருக்கிறது. இதனை இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் காலண்ட் தெரிவித்தார். இந்நிலையில் காஸா பகுதியைக் கைப்பற்றும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை எனவும் அங்குள்ள மக்களை கட்டுப்படுத்தும் எண்ணம் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். மேலும் இது மூன்று கட்டப் போர் என்று கூறினார். முதலில் வான்வழி தாக்குதல் நடைபெறும். பின்பு தாழ்வாக பறந்து விமான தாக்குதல், அதற்கு அடுத்ததாக ஹமாஸ் படையினர் ஒதுங்கி இருக்கும் சுரங்கங்கள் மீது தாக்குதல் நடைபெறும்.இறுதியில் காஸா முனையில் வாழ்வியலை இஸ்ரேலின் பொறுப்பில் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது என மூன்று கட்டங்களாக இந்த போர் நடத்தப்படும் என்று காலண்ட் தெரிவித்தார். அதே சமயத்தில் காஸா மக்கள் மீது கட்டுப்பாடு செலுத்தும் திட்டம் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.