கன்னியாகுமரியில் வரும் ஏப்ரல் ஐந்தாம் தேதி மத்திய மந்திரி அமித்ஷா தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அதில் வருகின்ற ஏப்ரல் 5-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் குமரி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் ரோடு ஷோ மூலமாக வாக்கு சேகரிக்கிறார். மேலும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியில் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அமித்ஷா வருகை திருப்புமுனையை உண்டாக்கும் வகையில் அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.