மத்திய உள்துறை மந்திரி இன்று தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்ய வந்த நிலையில் காரைக்குடியில் நடைபெற இருந்த ரோடு ஷோவை ரத்து செய்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் பிரதமர் மோடி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்தார். அதன்படி மதுரையில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை சென்று காரைக்குடியில் ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரெனவே ரத்து செய்யப்பட்டது. சிவகங்கை பாஜக வேட்பாளர் மீது நிதி மோசடி வழக்கு இருந்ததால் இது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மதுரையில் பன்னிரண்டாம் தேதி பாஜக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்த பிறகு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் நிகழ்வையும் அமித்ஷா ரத்து செய்துள்ளார்.