பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என அமித்ஷா அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பா.ஜ.க. பல்வேறு கட்சிகளுடன் தோழமையுடன் உள்ளது. 2024-ம் ஆண்டு தேர்தலிலும் அந்த தோழமை தொடரும். தமிழ்நாட்டில் பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி வலுவான நிலையில் உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கொண்டுள்ள கூட்டணியும் தொடர்கிறது. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அ.தி.மு.க. கூட்டணியில் தான் பா.ஜனதா இருக்கிறது.
மேலும் நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்களை விசாரணை அமைப்புகள் மூலம் மத்திய அரசு குறி வைத்து செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் சொல்கிறார்கள். இப்போதுகூட ராகுல் பதவி இழப்பு விஷயத்தில் நாங்கள் அழுத்தம் கொடுத்ததாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் யாருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை என்று அவர் பேசினார்.