உலகப் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர் பிச்சை இடம் பிடித்துள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தற்போது உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் இந்திய தலைமை நிர்வாகி அதிகாரியாக உள்ளார். மேலும் 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்தார். அதனை தொடர்ந்து 2016 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை டைம்ஸுகளில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் இவர் சேர்க்கப்பட்டிருந்த போது அவரது சம்பளம் ரூபாய் 1800 கோடியாக இருந்தது. இரண்டாம் ஆண்டில் அவரது சம்பளம் 1869 கோடியாக இருந்தது. இது இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் சம்பளத்தை விட அதிகம். மேலும் ஏ ஐ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் புதிய உயரங்களை தொட்டு வரும் சுந்தர் பிச்சை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக மாறி சாதனை படைத்துள்ளார்.














