அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை 8.49 மணியளவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 75 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், 5.57° வடக்கு அட்சரேகை மற்றும் 95.07° கிழக்கு தீர்க்கரேகையில் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளிவரவில்லை. கடந்த 8ம் தேதி இதே பகுதியில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.