ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் முழுநேர இயக்குநராக ஆனந்த் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் முழுநேர இயக்குநராக முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.நிறுவன வாரியக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, 2025 மே 1 முதல் இந்த நியமனம் அமலுக்கு வரும். ஆனந்த் அம்பானி இதுபோன்ற நிர்வாகப் பொறுப்பில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றவுள்ளார். இதற்கு முன்னர், ரிலையன்ஸ் நிறுவன வாரியத்தில் நிர்வாகமற்ற இயக்குநராக இருந்து வந்தார். முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி தற்போது ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர், மற்றும் மகள் இஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்லின் நிர்வாக இயக்குநராக உள்ளனர். இருவரும் ரிலையன்ஸ் நிறுவன வாரியத்தில் நிர்வாகமற்ற இயக்குநர்களாகவும் செயல்படுகின்றனர்.