திருமலையில் ரூ.23 கோடியில் புதிதாக கட்டப்பட்ட பரகாமணி கட்டிடத்தை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைத்தார்.
திருமலையில் தற்போது உண்டியல் காணிக்கை கோயிலுக்குள் எண்ணப்பட்டு வருகிறது. இதற்கென்று, கோயிலுக்கு வெளியே தனியாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு நவீன சில்லறை எண்ணும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பணம் எண்ணுவதை வெளியில் இருந்து பக்தர்கள் காணும்வகையில் சுற்றிலும் கண்ணாடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பெத்திரெட்டி ராமசந்திரா ரெட்டி, ரோஜா மற்றும் எம்.பிக்கள்,எம்.எல்.ஏக்கள், தேவஸ்தான அறங்காவலர் ஒய்.வி.சுப்பாரெட்டி, தலைமை நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பிரம்மோற்சவ விழாவின் 2-ம் நாளான நேற்று காலை உற்சவரான மலையப்ப சுவாமி 4 மாட வீதிகளிலிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 2 ஆண்டுகள் கழித்து வாகன சேவையை காணும் பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். ஆதலால், 4 மாட வீதிகளிலும் பக்தர்கள் நிரம்பி இருந்தனர். இதனால் மாட வீதி முழுவதும் பல்வேறு கலைநிகச்சிகள் நடைபெற்றன.