கைபேசியை கணினியின் வெப் கேமராவாக பயன்படுத்தும் வசதி - ஆண்ட்ராய்டு 14 ல் அறிமுகம்

February 3, 2023

பொதுவாக, கணினியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா அம்சம் கைப்பேசிகளின் கேமராவை போன்ற அதிக திறன் கொண்டதாக இருக்காது. பெரிய அளவிலான டிஸ்ப்ளேக்கு மேலே அதிக திறன் வாய்ந்த கேமராவை பொருத்த முடியாது. எனவே, வீடியோ கால்களில் முழுமையான வீடியோ அம்சம் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சிக்கலுக்கு தீர்வாக, ஆப்பிள் நிறுவனம், கடந்த ஆண்டு, ஐபோனை கேமராவாக பயன்படுத்த வசதிகளை ஏற்படுத்தியது. மேக்ஸ் புக் பயனர்களுக்கு, ஐபோனை கணினியுடன் இணைத்து, கேமராவை பயன்படுத்த ஆப்பிள் நிறுவனம் வகை […]

பொதுவாக, கணினியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா அம்சம் கைப்பேசிகளின் கேமராவை போன்ற அதிக திறன் கொண்டதாக இருக்காது. பெரிய அளவிலான டிஸ்ப்ளேக்கு மேலே அதிக திறன் வாய்ந்த கேமராவை பொருத்த முடியாது. எனவே, வீடியோ கால்களில் முழுமையான வீடியோ அம்சம் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த சிக்கலுக்கு தீர்வாக, ஆப்பிள் நிறுவனம், கடந்த ஆண்டு, ஐபோனை கேமராவாக பயன்படுத்த வசதிகளை ஏற்படுத்தியது. மேக்ஸ் புக் பயனர்களுக்கு, ஐபோனை கணினியுடன் இணைத்து, கேமராவை பயன்படுத்த ஆப்பிள் நிறுவனம் வகை செய்தது. இந்நிலையில், அதற்கு போட்டியாக, கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்டு 14ல், கைபேசியை கணினியின் வெப் கேமராவாக பயன்படுத்தும் வசதியை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தியில், "யுஎஸ்பி கேபிள் மூலம் கைப்பேசியை முதலில் கணினியுடன் இணைக்க வேண்டும். அப்போது, கைபேசியை கேமராவாக பயன்படுத்துவதற்கான கேள்வி கேட்கப்படும். அதில் சரி என்று தேர்வு செய்யும் பட்சத்தில், கைபேசியை கேமராவாக பயன்படுத்த முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu