விலங்கு வதை மற்றும் அதன் படங்களை பகிர்வதை தடைசெய்த டெல்லி அரசு, சமூக அமைதியை பாதுகாப்பதற்காக கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, டெல்லி அரசு பொது இடங்களில் விலங்குகளை கொல்வதையும், அவற்றின் படங்களை சமூக ஊடகங்களில் பரப்புவதையும் தடை செய்துள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. பசு, கன்று, ஒட்டகம் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட விலங்குகளை சட்டவிரோதமாக வெட்ட கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வுத்தரவு விலங்கு வதை தடுப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குமுன் உத்தரப்பிரதேச மாநிலமும் இதேபோல் தடையுத்தரவை அறிவித்திருந்தது.