அண்ணா பல்கலைக்கழக கட்டண உயர்வு நிறுத்திவைப்பு

November 18, 2023

அண்ணா பல்கலைக்கழகத்தின் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் நிறுத்தி வைத்திருப்பதாக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் 50% உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. செலவுகள் அதிகம், தேர்வு தாள் திருத்த கட்டணம், இதர செலவுகளை முன்னிட்டு கட்டண உயர்வு என்பது 100% இருக்க வேண்டும். ஆனால் 50 சதவீதமே உயர்த்தப்பட்டுள்ளது. இந்த செமஸ்டரில் பழைய கட்டணத்தை வசூலிக்க அமைச்சர் தெரிவித்துள்ளார். புதிய தேர்வு கட்டணம் அடுத்த செமஸ்டர் […]

அண்ணா பல்கலைக்கழகத்தின் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் நிறுத்தி வைத்திருப்பதாக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் 50% உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. செலவுகள் அதிகம், தேர்வு தாள் திருத்த கட்டணம், இதர செலவுகளை முன்னிட்டு கட்டண உயர்வு என்பது 100% இருக்க வேண்டும். ஆனால் 50 சதவீதமே உயர்த்தப்பட்டுள்ளது. இந்த செமஸ்டரில் பழைய கட்டணத்தை வசூலிக்க அமைச்சர் தெரிவித்துள்ளார். புதிய தேர்வு கட்டணம் அடுத்த செமஸ்டர் முதல் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்லாப் பல்கலைக்கழகத்திலும் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் விரைவில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu