குரூப்-4 தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 7301 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 19 லட்சம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். வழக்கமாக 2 அல்லது 3 மாதங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகிவிடும். ஆனால் இந்த முறை 8 மாதமாகியும் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் சர்ச்சை எழுந்தது. சமூக வலைத்தளங்களில் பலரும் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து, இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி நேற்று பிற்பகல் குரூப்-4 தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.