பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அந்த வகையில், திருநெல்வேலி, தூத்துக்குடி ஊர்களுக்கு முன்பதிவு இல்லாத 2 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தாம்பரம் - தூத்துக்குடி - தாம்பரம், தாம்பரம் - நெல்லை - தாம்பரம் வழித்தடங்களில் முன்பதிவு இல்லாத ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடிக்கு ஜனவரி 14, 16 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் கிளம்பும் சிறப்பு ரயில், தூத்துக்குடியில் இருந்து ஜனவரி 15, 17 ஆகிய தேதிகளில் தாம்பரம் பயணிக்கிறது. காலை 7:30 மணிக்கு தாம்பரத்தில் கிளம்பும் ரயில், இரவு 10:45 மணிக்கு தூத்துக்குடி சென்றடைகிறது. மறு மார்க்கத்தில், காலை 6:00 மணிக்கு தூத்துக்குடியில் கிளம்பும் ரயில், இரவு 8:30 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. அதேபோல், ஜனவரி 11, 13, 16 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுவே, ஜனவரி 12, 14, 17 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இரவு 9:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11:45 மணிக்கு திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரயில், மறு மார்க்கத்தில், மதியம் 2:30 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு, அதிகாலை 3:15 மணிக்கு தாம்பரம் வருகிறது.