தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் ஆன திங்கட்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இது ஞாயிற்றுக்கிழமை வருவதால் மறுநாள் ஆன திங்கட்கிழமையும் விடுமுறை அளிக்கும் படி அரசு அலுவலர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு 13.11.2023 அன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்ய 18.11.2023 அன்று பணி நாளாகவும் அறிவித்து உத்தரவை வெளியிட்டுள்ளது.