ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க தமிழக அரசு உத்தரவு

October 13, 2022

மானியம் பெரும் அனைத்து மின் நுகர்வோர்களும் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் உத்தரவை தொடர்ந்து வங்கி கணக்குகள், பான் கார்டுடன் ஆதாரை இணைக்கும் பனி நடைபெற்று வருகிறது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் அரசிடம் இருந்து மானியம் பெரும் அனைத்து மின் நுகர்வோர்களுக்கு தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு […]

மானியம் பெரும் அனைத்து மின் நுகர்வோர்களும் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஒன்றிய அரசின் உத்தரவை தொடர்ந்து வங்கி கணக்குகள், பான் கார்டுடன் ஆதாரை இணைக்கும் பனி நடைபெற்று வருகிறது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் அரசிடம் இருந்து மானியம் பெரும் அனைத்து மின் நுகர்வோர்களுக்கு தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முதல் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பெரும் வீட்டு நுகர்வோர், குடுசை நுகர்வோர், பொது வழிபாட்டுத்தலங்கள், விவசாய பயன்பாடு மின் இணைப்புகள், விசைத்தறி, கைத்தறி நுகர்வோர்கள் என மானியம் பெரும் நுகர்வோர்கள் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள், கடைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாத நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தேவையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu