யூகோ வங்கி, தனது 4ம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மார்ச் மாத இறுதியில், வங்கியின் நிகர லாபம் 581.24 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் 312.18 கோடியாக பதிவாகி இருந்தது. எனவே, வங்கியின் லாபத்தில் 86.19% வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், வருடாந்திர நிகர லாபம் புதிய உச்சமாக 1862 கோடி அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், மற்றொரு வரலாற்று உச்சமாக, வங்கியின் சர்வதேச வணிகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 335850.24 கோடியாக இருந்த சர்வதேச வணிகம், 16.14% உயர்ந்து 410967.19 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
வங்கிக்கு வட்டி மூலம் கிடைக்கும் நிகர வருவாய் 1652.39 கோடியில் இருந்து 1972.12 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், வருடாந்திர வட்டி வருவாய் 13.44% உயர்ந்து 7343.13 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கியில் இருக்கும் வைப்புத் தொகை அளவும் புதிய உச்சமாக 24937.74 கோடியாக பதிவாகியுள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 11.28% உயர்வாகும். அதே வேளையில், வங்கியின் மொத்த வாராக் கடன் 4.78% ஆக குறைந்துள்ளது. எனவே, வங்கி ஆரோக்கியமான பாதையில் பயணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.