உலகின் முன்னணி கிராபிக்ஸ் சிப் உற்பத்தியாளரான என்விடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்கின் சொத்து மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளது. நிறுவனத்தின் பங்குகள் 9.5% வீழ்ச்சியடைந்துள்ளன. அத்துடன், ஒரே நாளில், ஹுவாங்கின் சொத்து மதிப்பு $10 பில்லியன் குறைந்து, தற்போது $94.9 பில்லியனாக உள்ளது. இது அவரது மிகப்பெரிய ஒரு நாள் இழப்பாகும்.
அமெரிக்க நீதித்துறை, என்விடியா நிறுவனத்தின் செயல்பாடுகள் நியாயமாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. இந்த விசாரணை, நிறுவனத்திற்கு எதிராக அதிகாரப்பூர்வமான குற்றச்சாட்டுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்பத் துறையில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாகவே, என்விடியாவின் பங்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.