பாகிஸ்தான் - வன்முறை காரணமாக, இம்ரான் கான் கட்சியிலிருந்து விலகிய மற்றொரு மூத்த தலைவர்

May 26, 2023

பிர்தோஸ் ஆஷிக், இம்ரான் கானின் தெஹ்ரிக்-ஏ-இன்சாப் கட்சியின் மூத்த தலைவர் ஆவார். இவர் இன்று கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். கடந்த மே 9ம் தேதி, கட்சியின் தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தான் அரசு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது கைது நடவடிக்கை பாகிஸ்தானில் வன்முறையை தூண்டியது. இந்த வன்முறை சம்பவம் காரணமாக, கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர். கட்சி, வன்முறையை மற்றும் தீவிரவாதத்தை தூண்டுவதாக கருதப்பட்டு, அதிகாரிகள் வெளியேறி வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, கட்சியின் செயலாளர் […]

பிர்தோஸ் ஆஷிக், இம்ரான் கானின் தெஹ்ரிக்-ஏ-இன்சாப் கட்சியின் மூத்த தலைவர் ஆவார். இவர் இன்று கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த மே 9ம் தேதி, கட்சியின் தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தான் அரசு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது கைது நடவடிக்கை பாகிஸ்தானில் வன்முறையை தூண்டியது. இந்த வன்முறை சம்பவம் காரணமாக, கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர். கட்சி, வன்முறையை மற்றும் தீவிரவாதத்தை தூண்டுவதாக கருதப்பட்டு, அதிகாரிகள் வெளியேறி வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, கட்சியின் செயலாளர் ஆசாத் உமர், முன்னாள் அமைச்சர்கள் பவாத் சவுத்ரி, சீரின் மசாரி ஆகியோர் வெளியேறிய நிலையில், இன்று பிர்தோஸ் ஆஷிக் வெளியேறியுள்ளார். அவர், "பாகிஸ்தானும் இம்ரான் கானும் ஒருபோதும் ஒன்றிணைந்து செயல்பட முடியாது" என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu