சீனாவை சேர்ந்த அலிபாபா குழுமத்தின் நெதர்லாந்து பிரிவு ஆண்ட்ஃபின் என்று அழைக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல், அலிபாபா தனது பேடிஎம் பங்குகளை விற்று வருகிறது. அந்த வகையில், தற்போது, அதன் கிளை நிறுவனமாக உள்ள ஆண்ட்ஃபின், தன் வசம் இருந்த பேடிஎம் பங்குகளை விற்க உள்ளது.
ஆண்ட்ஃபின் நிறுவனத்திடம் 13.6% பேடிஎம் நிறுவன பங்குகள் உள்ளன. அதில், 3.6% பங்குகளை பிளாக் டீல் எனப்படும் பங்குச் சந்தை பரிவர்த்தனை மூலம் ஆண்ட்ஃபின் விற்க உள்ளது. இதன் மொத்த மதிப்பு 234 மில்லியன் டாலர்கள் என சொல்லப்பட்டுள்ளது. ஒரு பங்கு 880 ரூபாய்க்கு விற்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இது, தற்போதைய பேடிஎம் பங்கு விலையை விட 2.7% சலுகை விலை ஆகும். இந்த பங்கு விற்பனைக்கு, சிட்டி குழுமம் தரகராக நியமிக்கப்பட்டுள்ளது. பேடிஎம் நிறுவனத்திலிருந்து, ஜப்பானின் சாஃப்ட் பேங்க், சீனாவின் அலிபாபா நிறுவனங்கள் படிப்படியாக வெளியேறி வருவது குறிப்பிடத்தக்கது.