இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் வெறுக்கத்தக்கது - ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி

October 9, 2023

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் வெறுக்கத்தக்க செயல் என்று ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத குழு ஏவுகணை தாக்குதல் நடத்தி போரில் ஈடுபட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காசாமுனையில் ஹமாஸ் குழுவினரின் இருப்பிடங்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை நடைபெற்ற தாக்குதலில் 400க்கும் மேற்கட்ட பயங்கரவாதிகள் […]

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் வெறுக்கத்தக்க செயல் என்று ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத குழு ஏவுகணை தாக்குதல் நடத்தி போரில் ஈடுபட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காசாமுனையில் ஹமாஸ் குழுவினரின் இருப்பிடங்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை நடைபெற்ற தாக்குதலில் 400க்கும் மேற்கட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் வெறுக்கத்தக்க செயல் என்று ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்த போரில் இஸ்ரேலுடன் ஆஸ்திரேலியா துணை நிற்கிறது. ஹமாஸ் அமைப்பின் தாக்குதல் பாரபட்சமற்ற, வெறுக்கத்தக்க செயலாகும். இதனை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இந்த தாக்குதலில் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu