பிரேசிலில் உள்ள எக்ஸ் நிறுவன அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் எக்ஸ் சமூக வலைத்தளம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரேசிலில் உள்ள எக்ஸ் நிறுவன அலுவலகம் மூடப்பட்டுள்ளது. பிரேசிலில் எக்ஸ் வலைதளத்தில் முன்னாள் அதிபர் ஜெயிர் பொன்சினேரேவுக்கு ஆதரவான வலதுசாரி கருத்துக்கள், போலி செய்திகள், வெறுப்புணர்வு கருத்துக்கள் போன்றவற்றை நீக்கும்படி அந்நாட்டு உச்சநீதிமன்றம் எக்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. நீதிபதி உத்தரவால் முடக்கப்பட்ட எக்ஸ் கணக்குகளை மீண்டும் செயல்பாட்டுக் கொண்டு வருவதாக எலான் அறிவித்தார். இதனால் எலான் மஸ்கிற்க்கு எதிராக நீதிபதி விசாரணை நடத்தினார். இதனால் இந்த விவகாரம் பெரிதானது. இந்நிலையில் பிரேசிலில் உள்ள அலுவலகத்தை மூடுவதாக எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
எக்ஸ் தனத்தில் பதிவிடப்படும் கருத்துக்கள் இனி தணிக்கைக்கு உட்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்ததை காரணம் காட்டி பிரேசிலில் செயல்பாடுகளை நிறுத்துவதாக எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதோடு அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் நீக்கப்பட்டுள்ளனர். அலுவலகம் மூடப்பட்ட போதிலும் எக்ஸ் வலைதள பக்கம் பிரேசிலில் செயல்பாட்டிலேயே உள்ளது.