ஏவுகணை தடுப்பு அமைப்பைக் கொண்ட ராக்கெட்டை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. அதே சமயம் ரஷ்யா தனது ராணுவ பலத்தை அதிகரிக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய ஏவுகணை தடுப்பு அமைப்பைக் கொண்ட ராக்கெட் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ரஷ்யா பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி கஜகஸ்தானில் உள்ள சாரிஷாகன் ஏவுதளத்தில் இருந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.