அப்பல்லோ மருத்துவமனை குழுமம் தனது நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் 60% உயர்ந்து, 144 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாய் 4302 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டில் 3546 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக, 2023 ஆம் நிதி ஆண்டில், அப்பல்லோ ஹாஸ்பிடல் நிகர லாபம் 819 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2022 ஆம் நிதி ஆண்டில், 1056 கோடியாக இருந்தது. மேலும், 2023 ஆம் நிதியாண்டின் மொத்த வருவாய் 16612 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டில் 14663 கோடி ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அப்பல்லோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டி, தொடர்ந்து, உலக தரம் வாய்ந்த சுகாதார சேவைகளை வழங்கவும், டிஜிட்டல் ஆரோக்கியத்தில் முன்னிலை வகிக்கவும், அப்பல்லோ மருத்துவமனை குழுமம் பணியாற்றி வருவதாக கூறினார்.