உக்ரைன் மீதான போரினால் ஆப்பிள் தனது ஆப் ஸ்டோரில் இருந்து ரஷ்ய சமூக ஊடக நெட்வொர்க்கை நீக்குகிறது

September 29, 2022

உக்ரைன் மீதான படையெடுப்பிற்காக பிரிட்டன் விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக, பிரபல ரஷ்ய சமூக வலைப்பின்னலான VKontakte ஐ ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கியதை ஆப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷ்யா வாக்கெடுப்பு நடத்தியது. அதைதொடர்ந்து பிரிட்டிஷ் அரசாங்கம் 92 ரஷ்ய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது. இது குறித்த அறிக்கையில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் ௯றியதாவது, துப்பாக்கி முனையில் நடத்தப்படும் போலியான வாக்கெடுப்பு நியாயமானதாக இருக்காது […]

உக்ரைன் மீதான படையெடுப்பிற்காக பிரிட்டன் விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக, பிரபல ரஷ்ய சமூக வலைப்பின்னலான VKontakte ஐ ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கியதை ஆப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷ்யா வாக்கெடுப்பு நடத்தியது. அதைதொடர்ந்து பிரிட்டிஷ் அரசாங்கம் 92 ரஷ்ய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது. இது குறித்த அறிக்கையில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் ௯றியதாவது, துப்பாக்கி முனையில் நடத்தப்படும் போலியான வாக்கெடுப்பு நியாயமானதாக இருக்காது . எனவே அதன் முடிவுகளை பிரிட்டிஷ் அங்கீகரிக்காது என்று தெரிவித்துள்ளார். மேலும் பிரிட்டிஷின் பொருளாதாரத் தடைகள் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புப் போருக்கு துணைபுரியும் நபர்களைக் குறிவைக்கின்றன என்று கூறினார்.
சான் பீட்டர்ஸ்பர்க்கை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான வி.கே ஆப்ஸ் ஆப்பிள் மொபைல் சாதனங்களில் உள்ளடக்கத்திற்கான நுழைவாயிலாக செயல்படுகிறது. VK ஆப்ஸ் ஆனது UK டெவலப்பர்களால் விநியோகிக்கப்படுகிறது . VK ஆப்ஸ் ஆனது செய்தி அனுப்புதல், டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் மளிகை பொருட்கள் வாங்குதல் மற்றும் சமூக வலைப்பின்னல் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றது. அது தனது வலைப்பதிவில், அதன் சில ஆப்கள் ஆப் ஸ்டோரில் இனி கிடைக்காது என்று கூறியது. அதைத் தொடர்ந்து ஆப் ஸ்டோரில் கிடைக்காத பயன்பாடுகளின் டெவலப்பர் கணக்குகளை நிறுத்தியதாக ஆப்பிள் அறிவித்தது. கணிணி மற்றும் பைபேசிகளில் ஏற்கனவே ஆப்களை பதிவேற்றியவர்கள் அவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால் ஆப்பிள் மற்றும் விகே-ன் ௯ற்று படி, ஆப் ஸ்டோர் மூலம் புதுப்பிப்புகள் இனி வழங்கப்படாது என அறிக்கை வெளியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu